மன்னார் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு -
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.
பண்ணையின் உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போதே முருங்கை மரத்தின் கீழ் வெடிபொருள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்து உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
-இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த வெடிபொருளையும் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டினை மீட்டு செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு -
Reviewed by Author
on
April 22, 2019
Rating:

No comments:
Post a Comment