நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ! அவரது நிலையை பார்த்து ரசிகர்கள் கலக்கம்
நடிகர் விஜயகாந்த் உடல்நல பிரச்சனை காரணமாக இரண்டு முறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இருப்பினும் அவர் உடல்நிலை முன்பு இருந்ததை போல மாறவில்லை.
அவர் துவங்கிய கட்சி தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலையில், அதில் பிரச்சாரம் செய்ய விஜயகாந்த் வரவில்லை.
இந்நிலையில் தற்போது அவரது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் விஜயகாந்த் தன் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார். அந்த சில வரிகளை பேச அந்த வீடியோவில் மொத்தம் 6 கட் உள்ளது.
ஒரு காலத்தில் கம்பீரமாக படத்தில் நடித்தவர், மேடைகளில் பேசியவர் இப்போது பேசவே முடியாத நிலையில் இருக்கிறாரே என வீடியோ பார்த்த ரசிகர்கள் அனைவரும் கலங்கியுள்ளார்கள்.
நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ! அவரது நிலையை பார்த்து ரசிகர்கள் கலக்கம்
Reviewed by Author
on
April 15, 2019
Rating:

No comments:
Post a Comment