தலைமன்னாரில்-மக்களிடம் நூதன முறையில் பணமோசடி-அவதானமாய் இருங்கள்
மன்னாரில் மக்களிடம் நூதன முறையில் பணமோசடி-அவதானமாய் இருங்கள் மன்னார் மாவட்டத்தில் தற்போது கிளம்பியுள்ள பல பிரச்சினைகளில் இதுவும் ஒரு பிரச்சினையாகவுள்ளது.
மன்னார் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பலவகையான வியாபாரத்தில் ஈடுபடுகின்ற நபர்களால் மக்கள் பலர் ஏமாற்றப்படுகின்றார்கள் குறிப்பாக....
- உடுப்பு துணி வியாபாரம்
- வீட்டுத்தளபாடங்கள் வியாபாரம்
- சமையல் இயந்திரங்கள் பாத்திரங்கள் வியாபாரம்
அச்சடிக்கப்பட்ட வர்ண அட்டையில் பெயரை பதிவு செய்து முற்பணமாக 1500 முதல் 5000 வரை பொருட்களின் பெறுமதிக்கு ஏற்ப பணத்தினைபெற்றுக்கொண்டு பின்பு தொடர்பினை நிறுத்துதல் பொருட்களையும் கொடுக்காது ஏமாற்றுதல் இப்படியாக பல சம்பவங்கள் நடைபெற்றாலும் யாரும் அதை துணிந்து ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்ர்வதில்லை பொலிசிலும் முறையிடுவதில்லை அப்படியான சம்பவம் ஒன்று தலைமன்னார் பியர் கிராமத்தில் நடந்துள்ளது.
சாம் என்று தன்னை அறிமுகப்படுத்திய நபர் தான் வவுனியா வளாகத்தில் கற்பதாகவும் பகுதிநேர வேலையாக பொருட்களை விற்பனை செய்வதாகவும் இதில் கிடைகின்ற வருமானத்தில் தான் எனது கல்விகற்றல் செயற்பாடுகளை பார்த்துக்கொள்கின்றேன் என சொல்லி தந்திரமாக பேசி 09-04-2019 புதுவருட பிறப்பினை முன்னிட்டு விசேட சலுகையில் குறைந்த விலைக்கழிவுடன் பொருட்களை தருகின்றேன் என சொல்லி ஒரே குடும்பத்தினைச்சேர்ந்தவர்களிடம் 5000 4000 1500 பெற்றுக்கொண்டதுடன் அயல் வீட்டார் ஒருவரும் தன்னிடம் பணம் இல்லை வாங்கில் எடுத்து தருகின்றேன் என்று சொல்லி கூடவே சென்று 5000 ரூபா பணத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளான் (BANK CCTV-அவனது முகத்தினை பெறலாம்)நம்பிக்கை வருவதற்கா தங்களது தலைமை காரியாலயம் திருகோணமலையில் இருப்பதாக சொல்லி அங்கிருந்து ஒருவர் தன்னை முகாமையாளர் என அறிமுகப்படுத்தி நீங்கள் பதிவு செய்த பொருட்கள் இன்னும் சில மணித்தியாளங்களில் வரும் என்று நம்பிக்கை வரும் வகையில் சொல்லியுள்ளார். இவர்களின் மாயயால வார்த்தையில் மயங்கி பணத்தினை இழந்து நிற்கும் பலரில் சிலர் தலைமன்னார் பியர் கிராமத்தில்
- M.DIYON
- T.MERY MERWIN
- JM.NAUSHAD
ASIAN GROUP OF COMPANY
MOBILE-0704227144
FACE BOOK-SARAVANAN SARAVANA
மக்கள் விழிப்பாய் இருந்தால் இப்படியான மோசடிகள் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு நாசகாரிய செயல்களில் ஈடுபடுபவர்களை இனம்கண்டு தகுந்த தண்டனைகள் வழங்கவேண்டும்.
தலைமன்னாரில்-மக்களிடம் நூதன முறையில் பணமோசடி-அவதானமாய் இருங்கள்
Reviewed by Author
on
April 14, 2019
Rating:

No comments:
Post a Comment