புத்தாண்டு வாழ்த்துச் செய்தி-மன்னார் மாவட்ட இந்து மதத் பீடத்தின் தலைவர் சிவ ஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள்
14 4 2019 (இன்று ) பகல்ஒரு மணி 12 நிமிடம் அளவிலே விகாரி என்கின்ற புதுவருடம் பிறக்கின்றது.பிறக்கின்ற இவ்வருடத்திலே திருமூலரால் "சிவபூமி " எனப் போற்றப்பட்டஇலங்கை திரு நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சகல அன்பு உள்ளங்களுக்கும் மன்னார் இந்து மத பீடம் சார்பாக தமிழ்ச் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதிலே பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.விட்டுக்கொடுப்புடனும். இதய சுத்தியுடனும் நாம் எல்லோரும் ஒற்றுமையாகவும், சுதந்திரமாகவும் , மனிதர்களை மனிதர்கள் மதிக்கக் கூடிய வகையிலும் , எமது ஈழமணித் திருநாட்டில் வாழ்வதற்கும் இறைவனுடைய பரிபூரணமான அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் .
ஒவ்வொரு மனிதனுக்கும் சுய கெளரவமும் தனிமனித சுதந்திரமும் உண்டு. மனிதர்களுடைய உணர்வுகளுக்குமதிப்பளிக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டும். ஓரறிவுள்ளதாவரங்களுக்கு கூடதொடுகை உணர்வு இருக்கின்றதுஇதனால்தான் தொட்டால் சிணுங்கி என்ற தாவரத்தினை இறைவன் படைத்திருக்கிறான். எனவே நாம் எல்லோரும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்கக் கூடிய சமூகமாக இந்தப் பூமியில் வாழவும் ஒற்றுமையுடனும் தூய சிந்தனையுடனும வாழ முன்வர வேண்டுமென வேண்டி நிற்கின்றோம்.
வயலுக்கு வரம்பு எவ்வாறு அவசியமோ அதே போன்று ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் வாழ்க்கை எனற வயலுக்கு அறம் சார்ந்த முறைமை என்ற வரம்பு அவசியமாக உள்ளது.எனவே அறநெறிப் பண்புகள் கைவரப்பெற்ற ஒரு முழுமையான சமூகம் என்ற வகையிலே நாம் ஒருமித்து, தன்னைப் போலவே மற்றவர்களை நேசித்து, ஒருவரது உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டு மதித்து , இலங்கை திரு நாட்டில் இன மத பேதமின்றி எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு பிறந்திருக்கின்ற இத்தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டு நமக்கெல்லாம் வழிசமைக்கும் என்று நான் நிறைவாக நம்புகின்றேன்.
வழி சமைக்க வேண்டுமென மனதாரப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
" சிவபூமி"யில் இருந்து சிவஸ்ரீ மஹா தர்மகுமாரக்குருக்கள்.

Reviewed by Author
on
April 14, 2019
Rating:

No comments:
Post a Comment