துணுக்காய் சந்தியில் கோர விபத்து..... ஒருவர் உயிரிழப்பு
இன்று காலை துணுக்காய் ஐயங்கன்குளத்தில் இருந்து கள்விலான் எனும் இடத்திற்கு மணல் ஏற்றுவதற்கு உழவு இயந்திரத்தல் நால்வர் வருகை தந்தபோது துணுக்காய் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து. தடம்புரண்டதில் பழைய முருகண்டியைச்சேர்ந்த குகனேஸ்வரநாயகம் நிசாந்தன் வயது 27 மற்றும் ஐயன்கன்குளத்தைச்சேர்ந்த நவரத்தினம் நவநீதன் 27 சிவகணேசமூர்த்தி சிவரூபன் 27
மற்றும் இருவர் இதில் நால்வர் காயமடைந்து மல்லாவி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் கு.நிசாந்தன் உயிர் இழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக ந.நவநீதன் மற்றும் சி.சிவரூபன் வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
உழவு இயந்திர வாகன சாரதி ராஜ்குமார் கதிர்வாணன் வயது 17 வாகனஅனுமதி பத்திரம் இல்லை என்பதும குறிப்பிடத்தக்கது.
துணுக்காய் சந்தியில் கோர விபத்து..... ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
April 16, 2019
Rating:

No comments:
Post a Comment