சவரிக்குளத்தில் இருந்து கோவில்குளம் ஊடாக ஆத்திமோட்டை செல்கின்ற வீதி நீண்ட காலமாக...
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சவரிக்குளத்தில் இருந்து கோவில்குளம் ஊடாக ஆத்திமோட்டை செல்கின்ற மக்கள் பாவனைக்குரிய வீதி புனர் நிர்மானம் செய்யப்படாமல் உள்ளதாக அந்தப்பகுதி விசாய மக்கள் கவலைதெரிவித்துள்னர்.
இவ்வீதி சவரிக்குளத்தில் இருந்து 5.கிலோ மீற்றரும் 800 மீற்றமான இந்த வீதி கடந்த பல நூறு வருடங்களாக நிரந்தர வீதி செய்யப்படவில்லை யுத்திற்கு முன்பு 2005 ம் ஆண்டு நியாப் திட்டத்தில் கிரவல் போடப்பட்டு செய்யப்பட்டது யுத்தம் முடிந்தபின் இரு தடவைகள் பிரதேச சபையினரால் மோட்டக்கிரைன்டர் கொண்டு வெட்டப்பட்டது வீதி இந்த வீதி.
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கும் மற்று மாந்தை மேற்கு பிரதேச சபைக்கும் செந்தமான வீதியாக உள்ளது என்பதோடு மக்கள் இது தொடர்பாக பல கடிதங்களும் சம்மந்தபட்டவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்பதோடு இந்த கிராமம் விவசாய கிராம் இங்கு 2000 ஏக்கர் வயல் காணி உண்டு விவசாயம் செய்கின்ற போதும் அதனை அறுவடை செய்கின்ற போதும்.
மழை காலத்திலும் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதோடு இவ்வீதி நோயுறறவரையும் கர்ப்பினி தாய்மார்களையும் இவ்வீதியுடாக சிகிச்சை பெற கொண்டு செல்ல முடியாது இந்த வீதி நீண்ட காலமாக இப்படியேதான் உள்ளதாக அந்தப்பகுதி விவசாய அமைப்பின் தலைவர் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சவரிக்குளத்தில் இருந்து கோவில்குளம் ஊடாக ஆத்திமோட்டை செல்கின்ற வீதி நீண்ட காலமாக...
Reviewed by Author
on
April 16, 2019
Rating:

No comments:
Post a Comment