மன்னாரில் மீண்டும் அசுத்தமான குடிநீர் விநியோகம்-மக்கள் அதிருப்தி
மன்னார் நகரில் தேசிய குடிநீர் வடிகால் வாரியத்தினால் மன்னார் நகர மக்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டு வருகின்றது.
15-04-2019 இன்று காலை பெரியகடை பகுதியில் மக்களின் பாவனைக்காக வந்த அசுத்தமான குடிநீரின் நிலை தான் இது ..எமது மக்களிடம் குடிநீருக்கான பணம் அறவிட்டே நீர் வழங்கி வருகின்றீர்கள்..
பல மில்லியன் ரூபா செலவில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள போதும் ஏன் மீண்டும் மீண்டும் இவ்வாறான குடி நீரை மக்களூக்கு விநியோகம் செய்கின்றீர்கள்.
மக்களுக்கான குடி நீரை ஏன் சுகாதாரமான சுத்தமான நீரை வழங்க முடியவில்லை ..
இந்த நீரை எமது மக்கள் பருகினால் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாவார்கள். என்பது தெரியவில்லையா....புரியவில்லையா..... இவ்வாறு பல தடவைகள் குடிநீர் வருகிறது இதனை கருத்தில் கொள்ளாது தட்டி கழித்து அசமந்த போக்காக செயல்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதனால் எமது மக்கள் அதிருப்திடைந்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்...
மன்னாரில் மீண்டும் அசுத்தமான குடிநீர் விநியோகம்-மக்கள் அதிருப்தி
Reviewed by Author
on
April 15, 2019
Rating:

No comments:
Post a Comment