முள்ளிவாய்கால் 10 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் கையளிப்பு-
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மரணித்த தமிழ் மக்களின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்தை முண்ணிட்டு வடக்கு கிழக்கு முழுவதும் நினைவேந்தல்கள் இடம் பெற்று வருகின்ற நிலையி இறுதி நாள் நிகழ்வுகள் எமது மக்கள் பேரவலத்தின் கொடுமைகளை அனுபவித்த அந்தநாட்களை, நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக மக்கள் கூட்டாக அனுஸ்டிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் MSEDO ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரணையுடன் உயிரிழந்த அனைத்து மக்களின் நினைவாக ஒவ்வருவரும் தங்கள் தங்கள் வீடுகளில் அவர்களுக்காக ஒரு மரங்களை நாட்டி அவர்களுக்கான நினைவேந்தல்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
அதே நேரத்தில் வருகின்ற மே மாதம் 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வின் போது மக்கள் இறந்தவர்கள் சார்பாக நடுவதற்கான மரங்களையும் அன்பளிப்பு செய்துள்ளனர்
அத்துடன் அவர்கள் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில்
இறந்த எம் மக்களுக்கான அடையாளங்களை உருவாக்குவோம் அவர்களின் நினைவேந்தல்கள் எப்போதும் சமூகத்தில் பிரதிபலிக்க கூடிய ஆக்கப்பூர்வமான நினைவேந்தல்களாக இருக்க வேண்டும் எனவும்.
இப் பத்தாவது நினைவேந்தலையிட்டு கோயில்கள், வீதிகள், பொது இடங்கள், ஆகியவற்றில் மரங்களை நாட்டுதல், அவர்கள் அனுபவித்த துயரங்களை நினைவுறுத்தும் வகையில் உப்பில்லா கஞ்சி சமைத்து பருகுதல் என்பவற்றின் ஊடாக எமது துன்பத்தை பகிர்ந்து கொள்வோம்.
எனவும் இந்த நாட்களில் மரணித்த எம் அன்புக்குரியவர்களின் பெயரால் அவர்களை மனதில் நிறுத்தி நற்காரியங்களில் ஈடுபட்டு இயற்கையையும் மனிதத்தையும் பாதுகாத்து பரஸ்பரம் நல்லிணக்கத்தையும் புரிதலையும் எம்மிடையே உருவாக்கும் கலாசாரத்தினை கட்டியெழுப்புவதனூடாக அவர்களுக்கு எமது நிலையான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளை செலுத்துவோம். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்கால் 10 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் கையளிப்பு-
Reviewed by Author
on
May 15, 2019
Rating:

No comments:
Post a Comment