மன்னார் பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்-(படம்)
மன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம்  யூட் வீதியில் வசித்து வந்த 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதி தனது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
-எனினும் குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் அச்சிறுவனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பேசாலை 7 ஆம் வட்டாரம்  யூட்வீதியில் வசித்து வந்த   பிறின்ஸ்டன் ரயனா (வயது 12) என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் எழுதி வைத்த கடிதம் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் கடந்த 08-05-2019 அன்று திகதி இடப்பட்டு எழுதப்பட்டுள்ளதோடு,தனக்கும் தனது தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும்,தான் கேட்பவை எவற்றையும் வாங்கித்தருவது இல்லை எனவும், தந்தை 2 ஆம் திருமணம் முடித்தது தனக்கு பிடிக்கவில்லை என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இந்தியா சென்றால் அங்கே தன்னை நன்றாக கவனிப்பார்கள் எனவும்,நான் இந்தியா செல்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் தாயார் இறந்த நிலையில் அவனுடைய தந்தை மறுமனம் செய்ததாக தெரிய வருகின்றது.
குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின் சடல பரிசோதனையின் பின் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம்-(படம்)
 
        Reviewed by Admin
        on 
        
May 15, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
May 15, 2019
 
        Rating: 




No comments:
Post a Comment