மன்னாரில் தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகளின் 33ஆவது நினைவு-படங்கள்
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகளின் 33 ஆவது நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை(6) மாலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டெலோ போராளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,டெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டெலோ போராளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,டெலோ கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகளின் 33ஆவது நினைவு-படங்கள்
Reviewed by Author
on
May 07, 2019
Rating:

No comments:
Post a Comment