மன்னார் எமில்நகர் புதுமை பூண்டி அன்னையின் ஆலயத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது-.படங்கள்
மன்னார் எமில்நகர் புதுமை பூண்டி அன்னையின் ஆலயத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
09-05-2019 வியாழக்கிழமை அருட்பணி அன்ரன் டலிமா மற்றும் அருட்பணி பீற்றர் மனோகரன் பங்கு மக்கள் அன்பிய உறுப்பினர்கள் அருட்சகோதரிகள் இணைந்து கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 09 நவநாட்கள் ஆராதனையும் வழிபாடும் இடம்பெற்று நற்கருணை ஆராதனையுடன் 17-05-2019 வேசிபர் விசேட நற்கருணை ஆராதனையும் இடம்பெற்று 18- 05-2019 திருவிழாத்திருப்பலி காலை 6-15 மணியளவில் மிகவும் சிறப்பாக சிறிய குருமடத்தின் இயக்குநர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் அருட்பணி அன்ரன் டலிமா மற்றும் அருட்பணி பீற்றர் மனோகரன் கூட்டுத்திருப்பலியாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
அன்னை மரியாள் அவளின் குணத்தினாலும் குடிகொண்டிருக்கும் இடத்தின் பெயராலும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றாள் பத்திமா புனித லூசியா பூண்டி அன்னை ஆரோக்கியமாதா சகாயமாதா வேளாங்கன்னி மாதா பரலோகமாதா அடைக்கலமாதா மடுமாதா இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
அன்னை மரியாள்
அன்பின் புரட்ச்சி
விசுவாசத்தில் புரட்ச்சி
செபத்தில் புரட்ச்சி
இவ்வாறான 03 புரட்ச்சிகளின் மூலம் தனது வாழ்வில் முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்து இயேசு கிறிஸ்த்துவின் தாயாக எம் ஒவ்வொருவரின் தாயாக இருந்து எமக்காக பரிந்துபேசுகின்ற அன்னையாக இருக்கின்றாள் அவர் வழியில் நாமும் பிறரோடு இணைந்து முழுமையான தூயமனத்துடன் இறைவனின் பிள்ளைகளாக வாழ்வதற்கு அன்னையின் அருளைப்பெறுவோம் என சிறப்பான இறைப்பிரசங்கம் அமைந்தது.
நாட்டின் அசாதரண சூழ்நிலைகரணமாக பாதுகாப்பு கருதி திருச்சுருவபவனி இடம்பெறவில்லைஆனாலும் அன்னையின் சிறப்பு ஆசிர்வாதமும் வாழ்த்தும் இடம்பெற்றது இவ்திருவிழாவில் பங்குமக்கள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் துறவறசபையினர் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தினைப்பெற்றுக்கொண்டனர்.
மன்னார் சிறிய குருமடத்தின் இயக்குநர் அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் அவர்களினால் இறைஅழைத்தழுக்கு பிள்ளைகளை தயார்படுத்துங்கள் என இறைகுடும்பங்களிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

-V.KAJENTHIRAN-
மன்னார் எமில்நகர் புதுமை பூண்டி அன்னையின் ஆலயத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது-.படங்கள்
Reviewed by Author
on
May 18, 2019
Rating:

No comments:
Post a Comment