பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!
தமிழின அழிப்பின் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது. அதேவேளை வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த உறவுகளால் நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், பிரான்ஸின் பரிஸில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான லா சப்பல் (la chapelle) பகுதியில் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி பேரணியாகச் சென்று அஞ்சலி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திடலில் உயிரிழந்த தமது தாய்த்தமிழ் உறவுகளுக்காக அஞ்சலியை செலுத்தினர்.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்த குறித்த திடலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மக்கள் உயிர்நீத்த உறவுகளுக்காக மலர்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவுகூரல் நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிலும் இருந்துவந்த புலம்பெயர் உறவுகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.

பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!
Reviewed by Author
on
May 18, 2019
Rating:

No comments:
Post a Comment