இரத்தத்தில் சேரும் அழுக்குகளை போக்கணுமா....இவற்றை மட்டும் செய்தாலே போதும் -
இரத்தமானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொக்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும்.
அப்படிப்பட்ட இரத்தத்தில் சேரும் அழுக்குகளை போக்க, சுத்திகரிப்பு செய்ய என்ன செய்யவது மிகவும் அவசியமானது ஒன்றாகும்.
அந்தவகையில் இரத்தத்தை சுத்தம் செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

- செம்பருத்திப்பூவின் இதழ்களை காய வைத்து பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.
- 1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.
- திராட்சை பழத்தை கழுவி சாப்பிட்டு வந்தால் சுரத்தை தணித்து மலச்சிக்கலை போக்கி இரத்தம் சுத்தமடையும்.
- நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கோளாறுகள் குறையும்.
- ஓரிதழ் தாமரையை அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.
- அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் குறையும்.
- இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவற்றைக் கலந்து அருந்தி வர இரத்தம் தூய்மை அடையும்.
இரத்தத்தில் சேரும் அழுக்குகளை போக்கணுமா....இவற்றை மட்டும் செய்தாலே போதும் -
Reviewed by Author
on
May 08, 2019
Rating:
No comments:
Post a Comment