அண்மைய செய்திகள்

recent
-

உலகின் அதிவேக ரயில் சோதனை வெற்றி!


உலகின் அதிவேக ரயில் சேவையை தனது தலையாய குறிக்கோளாக வைத்துள்ள ஜப்பான், மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜப்பான் பரிசோதித்துள்ளது.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மைபாரா மற்றும் கியோட்டோ நகரங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த ரயில் சோதனை மூலம் மணிக்கு 360 கிலோமீட்டர் வேகம் என்ற இலக்கை அடைய முடிந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ரயில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோ முதல் ஒசாகா வரையான வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் மாற்றங்களையும் தொழில் புரட்சியையும் செய்துவரும் ஜப்பான், வரும் 2031ஆம் ஆண்டுக்குள் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளது.





உலகின் அதிவேக ரயில் சோதனை வெற்றி! Reviewed by Author on May 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.