பேசாலை பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு
மன்னார் பேசாலை உருத்திபுரம் கிராம பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவரை பொலிசார் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருப்பதுடன் ஒருவரை 6.6.2019 வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் ரி.சரவணராஜா கட்டளை பிறப்பித்தார்.
ஞாயிற்றுக் கிழமை (26.5.2019) பாதுகாப்பு படையினர் பேசாலை பகுதியிலுள்ள உருத்திபுரம் கிராம பகுதியை அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தியபோது 73 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியிருந்தனர்.
காட்டுப்பகுதியில் கண்டுப் பிடிக்கப்பட்ட இவ் கஞ்சாப் பொதிகளில் இருவர் தலா 2 1/4 கிலோ கஞ்சாவை தங்கள் வசம் காட்டுப் பகுதியில் வைத்திருந்தபோதும் மற்றைய நபர் வீட்டிலும் 2 1/4 கிலோ கஞ்சாவை வைத்திருந்தபோதே மீட்டுள்ளனர்.
வீட்டில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவுக்கு மகனே பொறுப்பானவரே என தெரிவிக்கப்பட்டபோதும் மகன் தலைமறைவாகியுள்ளதால் அவ் வீட்டின் தந்தையே கைது செய்யப்பட்ட நிலையில் மூவரும் பேசாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தனர்.
இவ் மூவரையும் பேசாலை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (27) மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி பெருந் தொகையான கேரளா கஞ்சா இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் இதில் இருவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் பொலிசார் கோரிக்கை விடுத்தபோது எதிர்வரும் 31.5.2019 வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய செய்ய நீதவான் ரி சரவணராஜா உத்தரவு பிறப்பித்தார்.
மகனுக்காக கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 6.6.2019 வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரனி செல்வராஜ் டிணேஸ் மன்றில் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார்.

Reviewed by Author
on
May 28, 2019
Rating:

No comments:
Post a Comment