நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க தயார்! ரெலோ தீர்மானம் -
ரிசாட் பதியுதீன் விடாப்பிடியாக பதவியில் இருப்பாரானால் அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க ரெலோ தீர்மானம் எடுத்துள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உடனடியாக பதவி விலகுவதுடன், நீதியான விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ரெலோ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில் கட்சியின் தலைமை குழுக்கூட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி விடயம் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலக மறுத்தால், அரசாங்கம் பதவி விலக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பின்னணியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னணியுடையவர்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ள நிலையில் சந்தேகநபர்களை விடுவிக்க முயற்சித்ததாக இராணுவ தளபதியும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
எனவே, ரிசாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை துறந்து நீதி விசாரணையை எதிர் கொள்ள வேண்டும்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் மறுக்கும் பட்சத்தில் ரெலோவின் இரண்டு நாடாளுமன்ற உறுபபினர்களும் எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க தயார்! ரெலோ தீர்மானம் -
Reviewed by Author
on
May 27, 2019
Rating:

No comments:
Post a Comment