மன்னாரில் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் வரவு அதிகரிப்பு-K.J.பிறட்லி மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர்
கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலை குண்டு
வெடிப்புக்குப் பின் நாட்டில் நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையில்
ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் மன்னார் வலயத்தில் தற்பொழுது மாணவர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் K.J.பிறட்லி இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் ஆரம்பிக்க வேண்டிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாது காலம் தாழ்த்தி கடந்த வாரம் திங்கள் கிழமையே (06.05.2019) இரண்டாம் தவணைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
அதுவும் ஆரம்ப நிலை பாடசாலை மாணவர்கள் தவிர்த்த ஏனைய 6ம் ஆண்டு தொடக்கம் 13ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புக்களே நாடு பூராகவும்
ஆரம்பிக்கப்பட்டன.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் கல்வி வலயத்தில் 89
பாடசாலைகளில் 31 பாடசாலைகள் இரண்டாம் தவணைக்கான கல்வி நிலைக்காக கடந்த 6ந் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேளையில் இன்றைய சூழலில் நிலவி வரும் பயங்கரவாத அச்சத்தின் காரணமாக ஆரம்பத்தில் 47 வீதமான மாணவர்களின் வரவு காணப்பட்டதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார். ஆனால் தற்பொழுது கடந்த வெள்ளிக் கிழமை வரை 65 வீதமான மாணவர்களின் வரவு பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகமாக நகர் பகுதி பாடசாலைகளைத் தவிர்ந்த கிராமபுற பாடசாலைகளிலே அதிகமாண மாணவர்களின் வரவு பதிவாகியுள்ளதாகவும், அத்துடன் ஆசிரியர்களின் வரவும் திருப்திகரமாகவும் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு படையினர், பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் மாணவர்களின் பாதுகாப்பு நன்கு திருப்திகரமாக இடம்பெற்று வருவதையும் காணக்கூடியதாகவும், இதுவரைக்கும் இவ் பகுதி பாடசாலைகளில் எவ்வித அசம்பாவிதங்களுக்கான அறிகுறிகள் தென்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
May 11, 2019
Rating:

No comments:
Post a Comment