குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென -மனுஷ நாணயக்கார
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூக்கிலிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பயங்கரவாதிகளுக்கு நாடாளுமன்றத்தில் அடைக்கலம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த அவர், குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு கிடையாது என கூறினார்.
காலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “ரிஷாட் பதியுதீன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நிரூபித்துக்கொள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்வது மாத்திரமல்லாமல் தூக்கிலிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாடாளுமன்றத்தினூடாக பெற்றுக்கொடுப்போம்.
அத்துடன் களவு வேலைகளுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் அரசியல் விளையாட்டுகளுக்கும் நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் பல்வேறுப்பட்ட சந்தரப்பங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
52 நாள் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக புதிய பிரதமரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். தற்போது அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து அரசியல் விளையாட்டுகளை முன்னெடுத்து வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிஷாட்டை தூக்கிலிட வேண்டுமென -மனுஷ நாணயக்கார
Reviewed by Author
on
May 27, 2019
Rating:

No comments:
Post a Comment