மன்னார் அரிப்பு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள்-படங்கள்
கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர்
மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன்
அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில்
கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் அரிப்பு கிராமத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மன்னார்
முசலி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் புதன் கிழமை (15.05.2019) இடம்பெற்ற இவ் நிகழ்வில்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முசலி பிரதேச சபை தவிசாளர் சுபிகான் மற்றும் முசலி பிரதேச
சபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் அரிப்பு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள்-படங்கள்
Reviewed by Author
on
May 17, 2019
Rating:

No comments:
Post a Comment