சிரியாவில் ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான ....g
சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து, நாடு முழுவதும் பதற்ற நிலை தோன்றியது. முப்படையினரும், பொலிஸாரும் களத்தில் இறக்கப்பட்டு தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டன. இதன்போது பலர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும், பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைக்கும் இரகசிய தகவல்களின் போதும் பல்வேறு தடையங்கள் சிக்கின. இலங்கையை அதிர வைத்த இத்தாக்குதல்களில் சர்வதேச பயங்கரவாத ஐஎஸ் அமைப்புடன் இலங்கையர்கள் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, தெஹிவளை வீடொன்றில் வைத்து பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாம் இலக்க விசாரணை அறை அதிகாரிகள் 23,500 அமெரிக்க டொலர்களைக் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே பல விடயங்கள் வெளிப்படுத்தபப்ட்டுள்ளன.
இத் தகவல்களின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அந்த பணம் சிரியாவில் பயிற்சிபெறும் பயங்கரவாதிகளால் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் பயிற்சி பெறுவதாக கூறப்படும் மொஹம்மட் முஹ்சீன் இஷாக் அஹமட் மற்றும் சர்பாஸ் நிலாம் ஆகியோரின் பெற்றோரும் சகோதரியுமே குறித்த தெஹிவளை வீட்டில் வசித்துள்ளனர். பெற்றோரான மொஹம்மட் சஹீட் மொஹம்மட் முஹ்சின், சஹாப்தீன் இனாயா மற்றும் அவர்களது மகளான பாத்திமா ருவையா ஆகிய மூவரிடமும் சி.ரி. ஐ.டி.ல் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
சிரியாவில் ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான ....g
Reviewed by Author
on
May 16, 2019
Rating:

No comments:
Post a Comment