இளம் வயதில் பரிதாபமாக உயிரிழந்த நாட்டுக்காக பெருமை சேர்த்த தமிழர்...
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக சென்னை வந்த அவர், தனது தோழி ஒருவருடன் காரில் சென்றுள்ளார். அரும்பாக்கம் வழியாக வீடு திரும்பிய நிலையில், லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அவரது கார் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது.
இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து அண்ணாநகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் வயதில் பரிதாபமாக உயிரிழந்த நாட்டுக்காக பெருமை சேர்த்த தமிழர்...
Reviewed by Author
on
May 16, 2019
Rating:

No comments:
Post a Comment