அண்மைய செய்திகள்

recent
-

வலிந்து நசுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் என்பதால் தமிழர்கள் அந்த நினைவுகளில் இருந்து இன்றும் மீள முடியாமல் தரணி எங்கும் தவியாய் தவிக்கின்றனர்-V.S.சிவகரன்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சர்வதேச சதிவலைப் பின்னலினால் நசுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் பயணமாகிவிட்டது. மக்களின் பரிதவிப்பு, படபடப்பு, பதகளிப்பு, இலட்சியதாகம் இன்றும் ஆறவில்லை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) சனிக்கிழமை காலை    மன்னாரில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

இன அழிப்புக்குள்ளான ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேரை இன்றும் தேடுகின்றோம். இனியும் தேடுவோம்.
வலிந்து நசுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் என்பதால் தமிழர்கள் அந்த நினைவுகளில் இருந்து இன்றும் மீள முடியாமல் தரணி எங்கும் தவியாய் தவிக்கின்றனர்.

காலங்களும் காட்சிகளும் மாறியதே தவிர கோலங்களால் வந்த ஞானங்கள் எம்மை நாசகாரம் கொள்கின்றது. மனித உரிமைகள் மரணித்து போனது.

காணாமல் ஆக்கப்பட்டோர் காணல் நீராகி கனதி குறைந்து கண்ணீர் பஞ்சமே மிஞ்சியது. அரசியல் கைதிகள், அனாதைகளாவே அலுக்குலைகின்றனர்.

 காணிவிடுவிப்புகாலநீட்சிகோருகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் புதிராகி விட்டது.  வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டி வதைக்கிறது. தமிழ் தலைமைகளாலே தமிழ் தேசிய நீக்கம் பெருவளர்சி பெற்று வியாபித்து விட்டது.
 போராட்ட நீக்கம் நிறுவனங்களால் எல்லையிடப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளாகியும் அனாதையும், அபயமிழந்தவர்களும், விதவையும் தபுதாரன்களும் நிலை எய்ய முடியாமல் நீர்க்குமிளிக்குள் நீதி தேடி அலைகின்றனர்.

தமிழனுக்கு தலைமையின்மை அரசியல் ஆதாய சூதாடிகளே! வெள்ளரசு வேசம் போட்டு நல்லர சென்று நர்தனமிட்டு தாம் நாணயம் பெறுகின்றனர்.

 இன்றும் பாமரன் பத்தாண்டாய் பரிதவிக்கிறான். பேரினவாத இலங்கை அரசை வெறுத்த தமிழ் மக்கள் நீதிதேடி உலகின் மனசாட்சி கதவை தட்டினர்.

 இராஜதந்திரம், ராஜீகம் எனும் சனநாயக சொல்லாடலுக்குள் சிக்கி சின்னா பின்னமாகி, சிறைவைக்கப்பட்டு விட்டது உலகின் மனச்சாட்சி ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை பேசும் மதி கெட்ட உலகமும் சாட்டுப் போக்கு சொல்லி காலத்தை கடத்துகிறது.

ஆகவே பத்து ஆண்டுகளில் மிகவும் உச்ச நிலையை எட்டியது. அரசின் நன்கு திட்ட மிட்ட கட்டமைக்கபட்ட பகுதீக ரீதியான இன அழிப்பு. இதை தடுக்க யார் உண்டு?

உணர்ச்சி வச உரிமை அரசியல் பேசி வாக்குப் பெற்றவர்கள் இன்று அரசின் எடு பிடிகளாய் இருந்து துணை நிற்கின்றார்கள். எம் நேசத்துக்குரிய தமிழ் மக்களே! உங்களைச் சுற்றி மிகப் பெரிய சதிவலைகள் நடை பெறுகின்றன என்பதை இன்னும் புரியவில்லையா?
விழித்தெழுங்கள் எம் எதிர்கால சந்ததியை மீட்க. இல்லா விட்டால் நீர் கொழும்பு,சிலாபம் போல் ஆகி விடுவோம். கிழக்கு நிலமை மிகமோசம் ஆகிவிட்டது.

2009இல் இருந்த ஏக்கம் இன்னும், இன்றும் தளரவே இல்லை. அயல் நாட்டில் வசிக்கும் மனோ நிலையில் தான் தமிழ் மக்கள் மனதுக்குள் ஏங்கித் தவிக்கிறார்கள்.

அரசாங்கம் தமிழ் மக்களை இரண்டாந் தரப் பிரஜைகளாகவும், அடிமைகளாகவுமே எம்மில் மேட்டி மைவாதம் கொள்கிறது. நல்லினக்கம் என்பது வெறும் உதட்டளவு சொல்லாடலே. இதய சுத்தியோடு கடந்த எழுபது ஆண்டுகளாக எந்த நல்லெண்ணமும் காட்ட வில்லை.

தமிழ் மக்களின் எதிர் காலம் என்பது விடியாத இரவுகளாகவே பல தசாப்தம் கடந்தும் நீழ்கிறது.

 தம் கண்ணீரை தாமே துடைக்க என்ன விதி செய்தது எம்மினம்? சிந்தியுங்கள் எதிரி எமக்குள்ளும் துரோகிகளாய் சூழ்ந்து விட்டான். எம்மை நாம் தற்காத்துக் கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து சனநாயக போராட்டத்தை மேற்கொள்வோம். அதுவே கடந்த பத்து ஆண்டு மெய்ப்பித்த கசப்பான அனுபவம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

வலிந்து நசுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் என்பதால் தமிழர்கள் அந்த நினைவுகளில் இருந்து இன்றும் மீள முடியாமல் தரணி எங்கும் தவியாய் தவிக்கின்றனர்-V.S.சிவகரன். Reviewed by Author on May 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.