இராமநாதபுரம்-இராமேசுவரம் தனுசு கோடியில் ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நாளான மே 18 நிகழ்வு
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் தனுசுகோடியில் ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நாளான இன்று மே 18 10 வது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன்திருமுருகன் தலைமையில் ஈழத்திசை நோக்கி
இராமேஸ்வரம் தனுசுகோடி அரிச்சல் முனை பகுதியில் இருந்து ஒளிச்சுடர் ஏந்திய படகுகளுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக பொதுமக்கள் குழந்தைகள் பெருமளவில் பங்கு பெற்றனர்
நிகழ்ச்சியில் நாம் இங்கு அழுவதற்காக கூடவில்லை, எழுவதற்காக கூடியுள்ளோம் என்ற முழக்கங்களுடன் தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராமநாதபுரம்-இராமேசுவரம் தனுசு கோடியில் ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நாளான மே 18 நிகழ்வு
Reviewed by Author
on
May 18, 2019
Rating:

No comments:
Post a Comment