உலகை காப்பாற்ற உறுதிபூண்ட 19 நாடுகள்.. தனியாக எதிர்த்த அமெரிக்கா: பிரான்ஸ் வருத்தம் -
2015 ஆம் அண்டு போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை மீண்டும் உறுதிப்படுத்த கையொப்பமிட்ட 19 நாடுகள், காலநிலை தொடர்பான ஒப்பந்தத்தின் "மீளமுடியாத தன்மை" குறித்து ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த உறுதியளித்துள்ளனர்.
ஜி 20 உறுப்பினரான அமெரிக்காவின் ஒரே ஒரு எதிர்ப்பை, மற்ற உறுப்பினர்கள் எதிர்கொண்டதால், சிரமத்துடன் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் மீண்டும் அடையப்பட்டுள்ளது.
காலநிலை குறித்து நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், விஞ்ஞானிகள் ஒவ்வொரு நாளும் நமது கடமையை நினைவூட்டுகிறார்கள். இளைஞர்களும் நமது கடமையை நினைவூட்டுகிறார்கள்.
அமெரிக்காவைத் தவிர 19 உறுப்பினர்களுடன் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். காலநிலை பற்றிய அத்தியாவசிய மாற்றங்கள் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம் என உறுதியளித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டே, பாரிஸ் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்க ட்ரம்பை, சமாதானப்படுத்த நான் அதிகபட்சம் முயற்சி செய்தேன். தற்போது, அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு என்னால் வருத்தம் மட்டுமே பட முடியும் என தெரிவித்துள்ளார்.
உலகை காப்பாற்ற உறுதிபூண்ட 19 நாடுகள்.. தனியாக எதிர்த்த அமெரிக்கா: பிரான்ஸ் வருத்தம் -
Reviewed by Author
on
June 30, 2019
Rating:
Reviewed by Author
on
June 30, 2019
Rating:


No comments:
Post a Comment