மரண பயத்தை காட்டிய ஆப்கானிஸ்தான்...பாகிஸ்தான் வெற்றி
உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 36வது லீக் போட்டியில் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி, கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமத் ஷா, குல்பதீன் நயீப் களமிறங்கினர். நயீப் 15 ஓட்டங்களிலும், ஹஸ்மதுல்லா ஷஹிதி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய ரஹமத் ஷா 35 ஓட்டங்களில் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அஸ்கர் ஆப்கன் 42 ஓட்டங்களிலும், நஜ்புல்லா சட்ரன் 42 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹிப் அப்ரிதி 4 விக்கெட்டும், இமாத் வாசிம், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆண்கள் உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட் கைப்பற்றிய முதல் இளம் வீரர் என்ற புது வரலாறு படைத்தார் ஷஹிப் அப்ரிதி.

இதையடுத்து, 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான பஹர் ஜமான் (0), இமாம் உல் ஹக் (36) ஏமாற்றினர். பாபர் அசாம் (45) ஓரளவு கைகொடுத்தார்.
பின்ன்னர் களமிறங்கிய ஹபீஸ் (19), ஹரீஸ் சோகைல் (27), சரப்ராஜ் (18), சதாப் கான் (11) ஆகியவர்கள் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறு முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாத் வாசிம், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி, 49.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.


மரண பயத்தை காட்டிய ஆப்கானிஸ்தான்...பாகிஸ்தான் வெற்றி
Reviewed by Author
on
June 30, 2019
Rating:
No comments:
Post a Comment