3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா! -
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் சட்டரீதியாக பதிவு செய்யப்படவில்லை என ஹிஸ்புல்லாஹ் ஒப்புக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அல்லது நாட்டின் எந்தவொரு நிறுவனத்திலோ பதிவு செய்யப்படவில்லை எனவும் அந்த பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பதிவு செய்யப்படவில்லை எனவும் அங்கு சட்டவிரோத செயற்பாடு இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்திய நுகேகொட நாலந்தாராமாதிபதி திநியாவல பாலித தேரர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டிற்கமைய ஹிஸ்புல்லாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் 3 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா! -
Reviewed by Author
on
June 16, 2019
Rating:

No comments:
Post a Comment