பாரிய தீ விபத்து -முழுவதுமாய் பற்றி எரியும் தொழிற்சாலை -3000 தொழிலாளர்களின் நிலை ....
குருணாகலில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னல - இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மூவாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி செய்யும் இந்த தொழிற்சாலையின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்து, தொழிற்சாலை கட்டடம், அலுவலகம், இயந்திர பகுதி உட்பட முழுவதும் பரவியுள்ளது. இதனால் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீவிபத்து ஏற்பட்டு 3 மணித்தியாலங்கள் வரை கடந்தும் தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு வருகைத் தராமையினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் நீர்கொழும்பு மற்றும் குருணாகலை தீயணைப்பு குழுவினர் பிரதேச மக்களுடன் இணைந்து தீப் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
பாரிய தீ விபத்து -முழுவதுமாய் பற்றி எரியும் தொழிற்சாலை -3000 தொழிலாளர்களின் நிலை ....
Reviewed by Author
on
June 14, 2019
Rating:
Reviewed by Author
on
June 14, 2019
Rating:


No comments:
Post a Comment