48 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு: காரணம் தேடும் அதிகாரிகள் -
மின் இணைப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள பழுதால் மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டு, அர்ஜெண்டினா மற்றும் உருகுவேயில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை ஏழு மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது என்றும், அதனால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும்,
போக்குவரத்து சிக்னல்கள் பழுதாகியுள்ளன என்றும் அர்ஜெண்டினாவை சேர்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அர்ஜெண்டினா மற்றும் உருகுவேயின் மொத்த மக்கள் தொகை 48 மில்லியன் ஆகும்.
அர்ஜெண்டினாவின், சாண்டா ஃபா, சான் லூயிஸ், ஃபார்மோசா, லா ரோஜா, சுபுட், கர்டோபா மற்றும் மெண்டோசா ஆகிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் இந்த மின்வெட்டு குறித்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வடக்கில் தலைநகர் புயுனோஸ் ஏரிஸ், மேற்கில் மெண்டோசா மறும் தெற்கில் ரிவாடாவியா என நாட்டின் பல நகரங்களில் இந்த மின்வெட்டு குறித்த செய்தி பரவி வருகிறது.
மேலும் காரணம் தெரிவிக்கப்படாத இந்த மின்வெட்டானது சீரமைக்கப்பட 8 மணி நேரத்திற்கும் மேலாகலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
48 மில்லியன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு: காரணம் தேடும் அதிகாரிகள் -
Reviewed by Author
on
June 17, 2019
Rating:
Reviewed by Author
on
June 17, 2019
Rating:


No comments:
Post a Comment