வரலாற்றில் மோசமான சாதனை - 9 பேர் டக்-அவுட்... அணியின் ஸ்கோர் 6..!
ருவாண்டா மகளிர் கிரிக்கெட் அணிக்கும், மாலி மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான டி20 போட்டி கிகாலி நகரில் நடைபெற்றது. முதலில் ஆடிய மாலி அணியில் 9 ஓவர்களில் அனைத்து வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக, 9 வீராங்கனைகள் டக்-அவுட் ஆகினர். தொடக்க வீராங்கனை மரியம் சமாகே 6 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார். மீதமுள்ள 5 ஓட்டங்கள் உதிரிகளாக வந்தவை. மேலும், ஒரு ஒரே வீராங்கனை மட்டும் 10 பந்துகளுக்கு மேல் மாலி அணியில் எதிர்கொண்டார்.
ருவாண்டா அணி தரப்பில் பந்துவீசிய 4 வீராங்கனைகளுமே விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய ருவாண்டா அணி 4 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஐ.சி.சியின் சமீபத்திய விதிகளின்படி உறுப்பு நாடுகள் இடையிலான டி20 போட்டிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கலாம்.
எனவே, இந்தப் போட்டியில் மாலி அணி 6 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது, சர்வதேச டி20 வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோராகப் பதிவானது. அதேபோல் அதிக பந்துகள் மீதமிருக்கும் நிலையில், வென்ற அணி என்ற சாதனையை ருவாண்டா அணி படைத்துள்ளது.
வரலாற்றில் மோசமான சாதனை - 9 பேர் டக்-அவுட்... அணியின் ஸ்கோர் 6..!
Reviewed by Author
on
June 20, 2019
Rating:

No comments:
Post a Comment