அண்மைய செய்திகள்

recent
-

மூன்றாவது நாளாக தொடரும் ரிஷாட்டுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் -


நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி அதுரலியே ரத்தன தேரர் மூன்றாவது நாளாகவும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த 31ஆம் திகதி ஆரம்பமானது.
எனினும் அவரது உடல்நிலை சீராகவே உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவரை சில மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வைத்தியர்கள் பரிசோதித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இரத்த அழுத்தம் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டதில் உடல் நிலை நன்றாகவே இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த மூவரை பதவி நீக்கம் செய்வதோடு, குருணாகல் வைத்தியர் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கின் ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் மீதான எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது நாளாக தொடரும் ரிஷாட்டுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் - Reviewed by Author on June 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.