இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியா... அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் -
லண்டனின் லார்ட்சில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணிக்கு பின்ச் மற்றும் வார்னர் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க அந்தணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது.

இதில் வார்னர் 53 ஓட்டங்களிலும், அடுத்து வந்த உஸ்மன் கவாஜ 23 ஓட்டங்களிலும் வெளியேற, பின்ச் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் சதம் அடித்த அவர் 100 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் அதிரடி காட்ட என அவுஸ்திரேலியா அணி இறுதியாக 50 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பின்ச 100 ஓட்டங்களும், வார்னர் 53 ஓட்டங்களும் குவித்தனர்.

இதையடுத்து 286 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த வீரர்களில் பென்ஸ்டோக்ஸ்(89) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் பெளலியன் திரும்பினர்.
இதனால் இங்கிலாந்து அணி 44.4 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்கள் எடுத்து 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகள் விளையாடி 4-ல் வெற்றி 3-ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4-வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் 2போட்டிகளில் தொடர்ந்து ஜெயித்தால் மட்டுமே இங்கிலாந்து அணி அரையிறுதியை நினைத்து பார்க்க முடியும், அப்படி ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் மற்ற அணியின் வெற்றி, தோல்வியை வைத்தே முடிவு செய்யப்படும்.
இதனால் இந்த தோல்வியால் இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்த போட்டிகள் வாழ்வா?சாவா? என்றே உள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியா... அரையிறுதி வாய்ப்பில் சிக்கல் -
Reviewed by Author
on
June 26, 2019
Rating:
No comments:
Post a Comment