பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..?
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 23ம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினை அடுத்து பிரதமராக பதவி வகித்த தெரேசா மே அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், புதிய பிரதமரை தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று வந்தன. பிரதமர் பதவிக்கு 10 பேர் போட்டியிட்டிருந்தனர்.
இவர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஜெரேமி ஹன்ட் ஆகியோரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்நிலையிலேயே, பிரித்தானியாவின் அடுத்த ஆளும்கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார்? என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 23ம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், தெரசா மே பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று முறைப்படி தனது இராஜினாமா கடிதத்தை பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபத்திடம் கையளிப்பார்.
அதன் பின்னர் ஆளும்கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..?
Reviewed by Author
on
June 26, 2019
Rating:

No comments:
Post a Comment