நீண்டகாலமாக பிரான்சில் அகதிகள் விவகாரத்தில் நடந்து வரும் சம்பவம்... பொலிசார் அதிரடி
பிரான்ஸ், பிரித்தானிய, ருமேனியா ஆகிய நாட்டு காவல்துறையினர் கடந்த 10 மாதங்களாக அகதிகளை கடத்திச் செல்லும் கடத்தல்காரர்கள் பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2017-ஆம் ஆண்டு ருமேனியாவைச் சேர்ந்த இரு வாகன ஓட்டுனர்கள் அகதிகளை பிரித்தானியா நோக்கி கடத்திச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனால் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளில் வடக்கு பிரான்ஸ் முழுவதும் பலத்த சோதானை நடவடிக்கைகள் நடந்தன. பெல்ஜியம், பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
முதலாவது கைது ஜூன் 10 ஆம் திகதி Dunkerque துறைமுகத்தில் இடம்பெற்றது. இந்த ஆட்கடத்தல் குழுவின் தலைவன் ருமேனியாவிலும், அவனுடன் மேலும் ஒன்பது பேரும், பிரான்சில் ஆறு பேரும் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மொத்தமாக 259 தடவைகள் அகதிகளை கடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
நீண்டகாலமாக பிரான்சில் அகதிகள் விவகாரத்தில் நடந்து வரும் சம்பவம்... பொலிசார் அதிரடி
Reviewed by Author
on
June 26, 2019
Rating:

No comments:
Post a Comment