"இளையராஜா.. ஒட்டுமொத்த தமிழ்சினிமா இசையின் ஒற்றைக் குறியீடு!"

பின்னணி இசையானது ஒரு காலகட்டம் வரை படத்தின் காட்சிக்குப் பின்னால் நிரப்பியே ஆகவேண்டும் என்ற கட்டாய சடங்காகத்தான் இருந்தது. கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், உளவியலையும் முன்னிலைப்படுத்தி திரைக்கதையின் ஓட்டத்துக்கேற்ப இசைக்கோர்வைகளைச் சேர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியவர், இவர் சில திரைப்படங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியே வரும்போது நம்மையறியாமல் நம் குரல் அதில் இடம்பெற்ற ஒரு பின்னணி இசைத் துணுக்கையோ, பாடலையோ முனுமுணுத்துகோண்டே இருக்கும். அதுவே அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தால் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக ஒரு முழு இசைக் கோர்வையே நம் ஆழ்மனதில் பதிந்திருக்கும்.
தன்னுடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையிசைப் பயணத்தில், இளையராஜாவின் சாதனைகள் எனப் பட்டியலிட்டால் சர்வதேச விருதுகள், தேசிய விருதுகள், மாநில விருதுகள், பாடல்கள், பாராட்டுகள் எனப் பல வகையில் அதைப் பிரிக்கலாம். ஆனால், நம் மனதில் இப்படிப் பதிந்து, பல நாள்களுக்கு நம் உணர்ச்சிகளுக்கு உரம்போடும் அந்தக் கலைஞனின் பின்னணி இசையைப் பட்டியலிட்டால், அதில் தமிழ்த் திரையுலக இசையின் இத்தனை ஆண்டுக்காலப் பரிணாம வளர்ச்சியையே அடக்கிவிடலாம். காரணம், தன் பயணத்தின் பெரும்பகுதியைப் பல கட்டுப்பாடுகளுக்குள்ளும், வட்டத்துக்குள்ளும் முடங்கிக் கிடந்த திரையிசையை அந்தச் சிறையிலிருந்து விடுவிப்பதிலேயே இளையராஜா செலவழித்தார் என்றே சொல்லலாம்.
பின்னணி இசையானது ஒரு காலகட்டம் வரை படத்தின் காட்சிக்குப் பின்னால் நிரப்பியே ஆகவேண்டும் என்ற கட்டாய சடங்காகத்தான் இருந்தது.
Mouna Ragam (1986)
நகைச்சுவைக் காட்சிக்குக் கேலியாக, உச்சக்கட்ட காட்சிக்குப் பரபரப்பாக என முன்முடிவுகளினாலேயே கட்டமைக்கப்பட்ட பின்னணி இசை முறையை உடைத்து, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், உளவியலையும் முன்னிலைப்படுத்தி திரைக்கதையின் ஓட்டத்துக்கேற்ப இசைக்கோர்வைகளைச் சேர்க்கும் முறையை அறிமுகப்படுத்தியவர், இளையராஜா.
அதற்கு ஒரு சரியான உதாரணம், 'மௌன ராகம்'. இன்றுவரை பல இளைஞர்களின் மொபைல்களை ஆக்கிரமித்துள்ள அந்தப் படத்தின் பின்னணி இசைக்கோர்வை, இளையராஜாவின் 'மாஸ்டர் பீஸ்'களில் முக்கியமானது.
ஒரே இசைத் துணுக்கை வெவ்வேறு வகையான கருவிகளில் பதிவு செய்து, படத்தில் வரும் ரேவதி கதாபாத்திரத்தின் மனநிலைக்கேற்ப மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, வருத்தம், இழப்பு என அனைத்து உணர்வுகளையும் அப்படியே இசையால் உணர்த்தியிருப்பர், ராஜா.
ஒருமுறை கவிஞர் வாலி இளையராஜாவுக்கு ஒரு புகழஞ்சலிக் கவிதை ஒன்றை எழுதினார். ‘உன் தேகமெல்லாம் ராகம்.. உன் நாளமெல்லாம் தாளம்.. உன் குருதியெல்லாம் சுருதி.. நீ இசைஞானி இல்லை; இசைமேனி!” என்ற வரிகள் அவை. அதற்குக் காரணமாக, பின்னணி இசையின் மீது இளையராஜாவுக்கு இருந்த ஆழமான அறிவுதான் என இயக்குநர் மகேந்திரன் விழா ஒன்றில் கூறினார்.
Idhayam (1991)
ஒரு படத்தின் திரைக்கதைக்கு இசையமைக்கும்போது, பொதுவாக அதன் மேலோட்ட உணர்வுகளுக்குத்தான் ஒலிகள் சேர்க்கப்படும். ஆனால், இளையராஜா திரைக்கதையின் லேயர்களுக்கும் (மறைபொருள்) சேர்த்து இசையமைப்பார். 'இதயம்' திரைப்படத்தில், முரளியின் கதாபாத்திரத்துக்கு ஹீராவிடம் காதலைச் சொல்வதில் ஒரு தயக்கம் இருக்கும். ஆனால், மனதின் ஆழத்தில் அந்த நாயகனின் ஏக்கமும் சேர்ந்திருக்கும். இந்தத் தயக்கம், ஏக்கம் இரண்டையும் கலந்தே ஒவ்வொரு காட்சிக்கும் இசையமைத்திருப்பார். அதுவே அந்தப் படத்தை இன்றுவரை ஒரு கிளாஸிக்காக நிலைக்கச் செய்திருக்கிறது.
அதேபோலத்தான், பாலுமகேந்திரா இயக்கிய 'மூடுபனி'யின் பிரதாப் போத்தன், சந்தான பாரதி இயக்கிய 'மகாநதி'யின் கமல் ஹாசன் கேரக்டர்களின் மனநிலைக்கு ஏற்றார்போல உளவியல் சார்ந்து ஒலியமைப்புகளைச் சேர்த்திருப்பார். இந்தப் படங்களையெல்லாம் பார்க்கும்போது, இதில் வரும் பின்னணி இசையை மட்டும் கண்களைமூடி உன்னிப்பாகக் கவனித்தாலே, அந்தக் கதை மாந்தர்களின் மனநிலையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
Mahanadhi (1994)
இளையராஜாவிடம் இருக்கும் மற்றொரு பழக்கம், இசையை டைனமிக்காக வைத்திருப்பது. அதாவது, திரையில் நிகழும் அசைவுகளுக்கேற்ப ஒலிகளையும் வடிவமைப்பது. 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில், கணவனை இழந்த வைதேகி (ரேவதி) வேறொரு ஆண்மீது கொண்ட காதலைப் பற்றி அவள் தந்தையிடம் 'மனசு சரியில்ல' எனக் கூறும் காட்சியில் அவர் துண்டு கையிலிருந்து தவறி விழும்.
அப்போது, பின்னணி இசையும் கூடவே சேர்ந்து விழுவதுபோல ஒலியமைப்பு இருக்கும். ஒரே நொடியில் இரண்டு கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளையும் திரையில் இருக்கும் அசைவோடு சேர்த்து, இசையால் உணர்த்திவிடுவார். பொதுவாக, ஒரு படத்துக்குப் பின்னணி இசையமைத்ததும் அதை மீண்டும் பார்க்கும் பழக்கம் ராஜாவுக்கு இல்லை. ஆனால், அவர் மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என விரும்பிய மிகக் குறைவான படங்களில், 'வைதேகி காத்திருந்தா'ளும் ஒன்று.
இதைப்போலவே, பிரகாஷ்ராஜின் 'தோனி' படத்தில் லாக்கரிலிருந்து விழும் கிரிக்கெட் பந்தின் அசைவுகளோடு சேர்த்து, மகனை கல்விமுறைக்குப் பறிகொடுத்த ஒருவனின் இழப்பையும், ஆதங்கத்தையும் இசையைக்கொண்டு இணைத்திருப்பார். பாலசந்தரின் 'உன்னால் முடியும் தம்பி' படத்தின் ஒரு காட்சியில், சாதி மதம் என்னவென்று கூறினால்தான் வேலை என்றால், அப்படிப்பட்ட வேலையே எனக்கு வேண்டாம் என சீதா சொல்லிவிட்டு மிடுக்குடனும் திரும்பிச்செல்லும் காட்சியில், 'சபாஷ்.. பலே..' என இளையராஜாவின் இசையும் அதே மிடுக்குடன் பின்தொடரும்.
Dhoni - Not Out (2012)
கதாபாத்திரங்களின் அல்லது காட்சியின் அசைவுகள் மட்டுமன்றி, அவர்களின் வளர்ச்சியையும் இசைக்குள் அடக்கும் யுக்தியைக் கையாள்வார், ராஜா. 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் ஜீவா, சமந்தா இருவரின் சிறுவயது முதல் இளமைப்பருவம் வரை கதை அமைக்கப்பட்டிருக்கும். சிறுவயதுக் காட்சிகளின் பின்னணிக்கும், பிளஸ் டூ படிக்கும்போது வரும் காதல் காட்சிகளுக்கும் இடையே மழலைக்கும், முதிர்ச்சிக்குமான வேறுபாட்டைக் காட்டியிருப்பார்.
இசையமைப்பாளர்கள் தங்களுடைய பாடல்களில் இடம்பெறும் இண்டர்லூடுகளையும் (இடை இசைத் துணுக்குகள்), பல்லவியின் டியூனையும் பின்னணி இசையில் பயன்படுத்தும் முறையும் இளையராஜாவால் பரவலாக்கப்பட்டதுதான். உதாரணமாக, 'சலங்கை ஒலி' படத்தில், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஜெயப்பிரதாவைச் சந்திக்கும் கமல் ஹாசனின் கதாபாத்திரத்திற்கு, அந்த இன்ப அதிர்ச்சியை வெளிப்படுத்த 'தகிடததுமி' பாடலின் ஹம்மிங்கைப் பின்னணியில் கோர்த்து, அந்த உணர்வுகளை அப்படியே திரையிலிருந்து பார்வையாளர்களிடம் கடத்தியிருப்பார்.
Salangai Oli (1983)
சில சமயம் பாடலின் டியூனுக்கு வேறொரு வடிவம் கொடுத்துப் பின்னணியில் இசைத்திருக்கிறார். 'தளபதி'யின் 'சுந்தரி கண்ணாலொரு சேதி' பாடலை வயலின் வடிவத்தில் அதைத் தொடர்ந்து வரும் சூரியாவின் (ரஜினி) காதல் பிரிவுக் காட்சியில் பயன்படுத்தியிருப்பார்.
அந்தக் காட்சியின் மொத்த சோகத்தையும் வெளிப்படுத்தும் இந்த வயலின் இசை. 'அழகி' திரைப்படத்திலும் 'ஒளியிலே தெரிவது' பாடலின் வயலின் வடிவமும், 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் 'கோடைகாலக் காற்றே' பாடலின் ஹார்மோனிக்கா வடிவமும், அந்தப் படங்களின் சோகக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பாடல்களே இல்லாத படங்களில்கூட இளையராஜா பலமுறை தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். மிஷ்கின் இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் பத்து இசைக் கோர்வைகளை உருவாக்கிப் படத்தின் பின்னணியில் சேர்த்திருப்பார். குறிப்பாக, எட்வர்ட் கதாபாத்திரம் தன்னுடைய பின் கதையைச் சொல்லும் காட்சிக்கு, அதன் உயிரோட்டத்துடனேயே இழையோடும் வகையில் மென்மையாகவும், அதேவேளையில் ஒரு சலனத்துடனும் 'எ ஃபேரி டேல்' எனும் ஐந்து நிமிட இசைத் துணுக்கு இடம்பெற்றிருக்கும். சிங்கிள் ஷாட்டில் விவரிக்கப்படும் கதை என்பதால், காட்சியை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் அமைதியும், வயலினும் கலந்து இசை உருவாக்கப்பட்டிருக்கும்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013)
பின்னணியைப் பொருத்தவரை ராஜாவின் ஆகப்பெறும் திறமை எனப் பல இயக்குநர்களும், இசை ஆர்வலர்களும் குறிப்பிடுவது, எந்த இடத்தில் அமைதியைக் கொடுத்து, எந்த இடத்தில் ஒலியைக் கூட்டவேண்டும் என்பதைக் காட்சியைப் பார்த்தவுடன் யூகித்துவிடும் திறனைத்தான். இயக்குநர் லெனின் பாரதியின் 'மேற்குத் தொடர்ச்சி மலை'யில் அது நன்றாகவே வெளிப்படும். படம் துவங்கி கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு மலைத்தொடரைத் திரையில் காட்டும்போதுதான், முதல் இசைக் கோர்வையும் தொடங்கும்.
இப்போதுள்ள சில படங்களுக்கும், அதில் வரும் ஹீரோக்களுக்கும் தீம் மியூசிக் கம்போஸ் செய்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், ராஜா அந்தக் காலத்திலேயே ஹீரோயின்களுக்கு தீம் உருவாக்கியவர். பொதுவாகவே, பாரதிராஜா மற்றும் பாலுமகேந்திரா படங்களுக்கு ஸ்பெஷலாகப் பின்னணி இசையமைப்பவர், ராஜா. குறிப்பாக '16 வயதினிலே'வின் மயிலுக்கும் (ஸ்ரீதேவி), 'முதல் மரியாதை'யின் குயிலுக்கும் (ராதா) கொஞ்சம் புதுவகையான தீம்களை அமைத்திருப்பார். 'செந்தூரப்பூவே' பாடலின் அதே சாயலிலேயே படம் முழுக்க மயிலின் காட்சிகளுக்குக் கிட்டார் மற்றும் வயலின் ஒலிகளால் நிரப்பியிருப்பார். அதுபோலவே 'முதல் மரியாதை'யில் அந்தக் கேரக்டரின் பெயருக்கேற்றவாறு குயிலின் கூச்சலைப் புல்லாங்குழலில் மறு உருவாக்கம் செய்து ராதா தோன்றும் காட்சிகளில் கலந்திருப்பார்.
புன்னகை மன்னன் (1986)
ராஜாவின் சில தீம்கள் காலம் தாண்டியும் நிலைத்து நிற்கின்றன. இயக்குநர் பாலசந்தர் இருந்தவரை அவர் பங்கேற்ற அத்தனை நிகழ்ச்சிகளிலும் அவருக்கான தீமாகவே மாறியது 'புன்னகை மன்னன்' படத்தில் இடம்பெற்ற தமிழ் சினிமாவின் முதல் சீக்வென்ஸர் இசை (கணினியைப் பயன்படுத்தி உண்டாக்கும் டிஜிட்டல் இசை). இப்போதுகூட அது துவங்கும் அந்த முதல் நோட்டைக் கேட்டவுடன், 'ச்சே.. புல்லரிக்குது' எனச் சொல்லும் இசை ரசிகர்கள் ஏராளம். அதற்குச் சற்றும் குறைவில்லாதது, மகேந்திரனின் 'ஜானி' படத்தின் தீம். இன்னும் புதுசு மாறாத இளையராஜாவின் பல தீம்களில் இது முதன்மையானது என்றே சொல்லலாம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 'ஜானி' தீமின் சாயலில் இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா '7ஜி ரெயின்போ காலனி'யிலும், 'காதல் கொண்டேன்' படத்திலும் வயலினின் ஆதிக்கத்தில் தீம்களைக் கம்போஸ் செய்திருப்பார். இவையல்லாமல், இளையாராஜவின் மேலும் பல தீம்கள் யுவன் மட்டுமன்றி, பல இளம் இசையமைப்பாளர்களால் இன்றும் படங்களில் பயன்படுத்தும் அளவுக்குப் புதியதாகவே இருக்கின்றன.
நெற்றிக்கண் (1981)
படத்தில் ஒரு பிளேபாய் கேரக்டர் வந்துவிட்டாலே, 'சின்னவீடு' படத்தின் 'நாகிருதனா' தீமும் தொடர்ந்து வருவது, இன்று ஒரு ஃபேஷன். அதுபோலவே 'நெற்றிக்கண்' படத்தில் மன்மதலீலைகள் செய்யும் ரஜினியின் தீமை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் வெளியான விஷாலின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் அப்படியே பயன்படுத்தியிருப்பார், யுவன்.
சோகக் காட்சி என்றாலே, 'நாயகன்' படத்தின் 'தென்பாண்டிச் சீமையிலே' அல்லது 'அபூர்வ சகோதரர்'களின் 'உன்ன நெனச்சேன்' பாடலின் தீமையோ எடுத்து அச்சு பிசகாமல் பயன்படுத்துவது பெரும்பட, குறும்பட இசையமைப்பாளர்களின் வாடிக்கை. யுவன்-பிரேம்ஜி-பவதாரிணி கூட்டணி மட்டும் அதில் கொஞ்சம் மாறுபட்டு, 'சென்னை 28' இரண்டாம் பாகத்தில் 'உன்ன நெனச்சேன்' தீமை டிஜிட்டலில் செதுக்கி ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கும்.
Tharai Thappattai (2016)
இதுவரை இளையராஜா பின்னணி இசைக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார் (பழசிராஜா மற்றும் தாரை தப்பட்டை). முதல் முறையாக 1994-ல் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வருடமே பின்வாங்கப்பட்ட அந்தப் பிரிவு, தேசிய விருது இயக்ககத்தால் 2009-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டபோது, முதலில் அதைப் பெற்றவரே இளையராஜாதான் என்பது தனிப்பெருமை. தன் வாழ்நாளில் பின்னணி இசைக்காக இப்படிப் பலவித முயற்சிகளை மேற்கொண்ட இளையராஜா, ஒருவேளை அந்தப் பிரிவு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், பலமுறை அந்த விருதை வாங்கிக் குவித்திருப்பார்.
இரண்டரை மணிநேரப் படத்துக்கு மாதக் கணக்கில் பின்னணி இசையமைக்கின்றனர், இளம் தலைமுறை இசையமைப்பாளர்கள். ஆனால், ராஜாவோ ஒரே நாளில் இரண்டு மூன்று படத்துக்குப் பின்னணி இசையமைத்தவர்.
Naayagan (1987)
இன்று தமிழ்த் திரையிசை இருக்கும் நிலைமையைக் கண்டு அவ்வப்போது இளையராஜாவும் அவரது ரசிகர்களும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வது இதுபோன்ற காரணங்களால்தான். இளம் இசையமைப்பாளர்களும், ராஜாவை ஒட்டுமொத்த தமிழ்த் திரையிசையின் முன்னோடியாகக் கருதி, 'நம்ம அப்பாதானே சொல்றாரு, நம்ம தாத்தாதானே சொல்றாரு' என அதைப் பெரிதாக மதிப்பதும், இளையராஜா என்ற 'இசைமேனி'யின் திரைப் பயணத்துக்கான பெரும் சான்று. அப்படிப்பட்ட மேதைக்கு இன்று 75 வயது. பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜா!

Reviewed by Author
on
June 02, 2019
Rating:

No comments:
Post a Comment