எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்! அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான் -
நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது, ஓமன் வளைகுடா பகுதியில் மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், ஈரான் அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும், இச்சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் கடந்த மே மாதம், சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், தற்போது எண்ணெய் கப்பல்கள் மீதான இவ்வகை தாக்குதல் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்! அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான் -
Reviewed by Author
on
June 14, 2019
Rating:
No comments:
Post a Comment