மன்னார் மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு-
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமகாலத்தில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் 20-06-2019 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆகஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,தன்னார்வ தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரையும் ஒன்றினைத்து குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில்
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை நல்லிணக்க அடிப்படையில் மீட்டுக்கொள்ளுதல், விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறிய மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,மக்களின் நில மீட்பு போராட்டங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய உதவித்திட்டங்கள் உற்பட மன்னார் மாவட்டத்தில் அண்மைகாலமாக மக்கள் எதிர் கொள்ளும் விடையங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கலந்து கொண்ட பிரதி நிதிகள் மற்றும் பொது மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன் எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்ட இணையமாக இயங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
June 21, 2019
Rating:

No comments:
Post a Comment