உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்... தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு -
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது.
இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றனர்.
ஆனால் போட்டி துவங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், போட்டி இன்னும் நடைபெறவில்லை.
இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகள் எவை என்பதை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சையிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்வியில், இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதும் என தான் நினைப்பதாகவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் சிறந்து விளங்குவதாக கூறியுள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்... தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு -
Reviewed by Author
on
June 14, 2019
Rating:
Reviewed by Author
on
June 14, 2019
Rating:


No comments:
Post a Comment