இங்கிலாந்து அணி-அபார வெற்றி பெற்று சாதனை
உலகக்கிண்ணம் தொடரின் 12வது லீக் போட்டியானது இங்கிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. கார்டிஃப் மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்களை குவித்தது.

அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 121 பந்துகளில் 153 ரன்களை குவித்திருந்தார். வங்கதேச அணி சார்பில் மெஹீடி ஹசன், முகம்மது சைஃபுடின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மஷ்ரஃபி மோர்டாஸா மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 121 ரன்களை குவித்திருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், மார்க் வுட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 7 முறை தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்கிற சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி-அபார வெற்றி பெற்று சாதனை
Reviewed by Author
on
June 09, 2019
Rating:
No comments:
Post a Comment