அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்ஷூ பெர்னாண்டோ காலமானார்

 2010ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் ஒருவரான அக்ஷூ பெர்னாண்டோ தமது 34 வது வயதில் காலமானார். 


2010ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் பானுக ராஜபக்ஷ, கிதுருவன் விதானகே மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருடன் இவர் விளையாடியுள்ளார். 

கடந்த 2018ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்தின் பின்னர் நினைவிழந்து (கோமா ) அவர், இருந்த நிலையில் இன்று (30) சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.




முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்ஷூ பெர்னாண்டோ காலமானார் Reviewed by Vijithan on December 30, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.