10 வீரர்களுடன் விளையாடி அபார வெற்றி.. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிரேசில்! -
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் பிரேசில்-பெரு அணிகள் மோதின.
காயம் காரணமாக பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த தொடரில் விளையாடவில்லை. எனினும், பிரேசில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய போட்டியில், 15வது நிமிடத்தில் பிரேசில் வீரர் எவர்டன் முதல் கோலை பதிவு செய்தார்.
அதன் பின்னர் எதிரணியினர் பதில் கோல் அடிக்க போராடினர். அதன் பயனாக, 44வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெரு அணி கோல் அடித்தது. அந்த அணியின் பவலோ குயேர்ரேரோ கோல் அடித்தார்.

உடனே, கிடைத்த கூடுதல் நேரத்தில் (45+3) பிரேசில் அணியின் கேப்ரியல் ஜீஸஸ் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், முதல் பாதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2வது பாதி நேர ஆட்டத்தில், இரண்டு அணிகளுக்குமே கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 70வது நிமிடத்தில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீஸஸ் Red card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பெரு அணி வீரர்களை பிரேசில் கோல் அடிக்க விடாமல் தடுத்தது. பின்னர், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரிச்சார்லிசன், அபாரமாக கோல் அடித்தார். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

10 வீரர்களுடன் விளையாடி அபார வெற்றி.. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிரேசில்! -
Reviewed by Author
on
July 09, 2019
Rating:

No comments:
Post a Comment