பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டும்? -
வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.
மேலும் இது வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் குறிப்பாக பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.
அந்தவகையில் பைல்ஸ் பிரச்சினை இயற்கை முறையில் தடுக்க கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பின்பற்றினால் போதும்.

- பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.
- மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.
- தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.
- அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.
- வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.
- மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும்.
- மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.
- இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.
- பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டும்? -
Reviewed by Author
on
July 09, 2019
Rating:
No comments:
Post a Comment