1.3 மில்லியன் மக்கள் பயனடைய மிகவிரைவில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கி -
வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கையை ஆளுநர் சுரேன் ராகவன் முன்னெடுத்துள்ளார்.
வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் இது தொடர்பான துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய மிகவிரைவில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியானது வடமாகாணத்தில் நிறுவுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த வங்கியினூடாக வட மாகாணத்தில் வாழும் சுமார் 1.3 மில்லியன் மக்களும் பயனடைய வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1.3 மில்லியன் மக்கள் பயனடைய மிகவிரைவில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கி -
Reviewed by Author
on
July 31, 2019
Rating:

No comments:
Post a Comment