நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட மீனவர்கள் -
எஞ்சிய மீனவர்களையும் படகையும் மீட்டுத் தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கபட்ட மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 04ஆம் திகதி கடலில் ஏற்பட்ட சூறைகாற்று காரணமாக நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாட்டு படகு முழ்கியுள்ளது.
படகில் மீன்பிடிக்க சென்ற ஸ்டிபன், அந்தோனி, வின்சன்ட், சின்னதாஸ் ஆகிய நான்கு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.
அவர்களை கடந்த நான்கு நாட்களாக சக மீனவர்கள்., இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் ஹெலிகாப்பட்டர் ஆகியவை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 9 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் ஸ்டிபன் மற்றும் அந்தோனி ஆகிய இரண்டு மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளித்துள்ளனர்.
குறித்த இருவரையும் மீட்டதோடு, மீனவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கடலில் முழ்கிய நாட்டுப்படகையும் எஞ்சியுள்ள இரண்டு மீனவர்களையும் மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல் போன ஏனைய மீனவர்கள் தொடர்பான தகவல்கள் இன்றும் வெளியாகாத நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட மீனவர்கள் -
Reviewed by Author
on
July 09, 2019
Rating:

No comments:
Post a Comment