அண்மைய செய்திகள்

recent
-

கழுத்து, வயிறு,தலை பகுதியில் கொடூரமாக கத்திக்குத்து! வெளிநாட்டில் ஆபத்தான நிலையில் இலங்கை பெண் -


சைப்பிரஸ் நாட்டில் இலங்கை பெண்னொருவர் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், Limassol பகுதியில் பணிப்புரிந்து வந்த 49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கத்திக்குத்துடன் முடிவடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.


பெண்ணின் அடிவயிறு, தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும். காயங்களுக்குள்ளான பெண், Limassol வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபராக பெண்ணின் முன்னாள் கணவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன், இந்த கொலை முயற்சி குறித்து Limassol பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரான பெண்ணின் முன்னாள் கணவர் இலங்கை பொலிஸாரினாலும் தேடப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கழுத்து, வயிறு,தலை பகுதியில் கொடூரமாக கத்திக்குத்து! வெளிநாட்டில் ஆபத்தான நிலையில் இலங்கை பெண் - Reviewed by Author on July 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.