மன்னார் மடு திருத்தலத்தில் அமைச்சர் நிறோசன் பெரேரா வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைப்பு-படம்
மன்னார் மடு திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மடு திருத்தலத்தில் அமைக்கப்படவுள்ள 252 மலசல கூடங்களை கொண்ட மலசல கூட தொகுதிக்கான அடிக்கல்லினை இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மலசல கூட தொகுதிக்கான அடிக்கல்லினை தேசிய கொள்கை,பொருளாதார,மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
மன்னார் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் இடம் பெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மடு பிரதேசச் செயலாளர் வி.ஜெயகரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.சிறி பாஸ்கரன், மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொகான் குரூஸ் உற்பட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
-குறித்த நிகழ்வில் மடு பிரதேசச் செயலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
-குறித்த நிகழ்வைத்தொடர்ந்து பருப்புக்கடந்தான் வீதியூடாக மடு திருத்தலத்திற்குச் செல்லும் பிரதான வீதியை இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா நேரடியாக சென்று பார்வையிட்டார்.
-குறித்த வீதி நீண்ட காலமாக புணரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாகவும் இதனால் குறித்த வீதியூடாக பயணிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா வின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டதோடு,குறித்த வீதியை துரித கதியில் புணரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment