மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு-குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்.
மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம்.இலங்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் மடு திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மடு திருத்தலத்தில் அமைக்கப்படவுள்ள 252 மலசல கூடங்களை கொண்ட மலசல கூட தொகுதிக்கான அடிக்கல்லினை இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மடு திருவிழாவிங்கு பிரதமர் வருகை தந்திருந்தார்.
அவருடன் நானும் இருந்தேன்.அப்போது என்னிடம் கேட்டார் மடு திருத்தலத்திற்கு என்ன தேவை? என்று. அப்போது வீடுகள்,மலசல கூடங்கள் உற்பட பல்வேறு தேவைகளை அவருக்கு கூறினேன்.
அந்த நேரத்திலே அவர் உடனடியாக இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா அவர்களை அழைத்து நான் கூறுவதை கேட்டு அதனை உடனடியாக செய்ய வேண்டும் என்ற பணிப்புரையினை விடுத்தார்.
ஆனால் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட இருந்த வீட்டுத்திட்டம் இன்னும் நடை முறைப் படுத்தப்படவில்லை.
ஆனால் பிரதமர் கூறிய விடையத்திற்கு இராஜாங்க அமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையில் மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு 252 மலசல கூடங்களை கொண்ட மலசல கூட தொகுதியை பக்தர்களுக்காக அமைத்து தர முன் வந்துள்ளனர்.
அதற்கான ஆரம்ப பணிகளும் இடம் பெற்றுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தருவது வழமை. குறிப்பாக ஆவணி திருவிழாவிற்காக சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வருவது வழமை. அவர்களுக்கான மலசல கூடங்கள் இங்கே உள்ளமை போது மானதாக இல்லை.
அந்த வகையில் நாங்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக 252 மலசல கூடங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஆராம்பிக்கப்பட்டமையினையிட்டு அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.
மடு பரிபாலகர்,அரசாங்க அதிபர்,பிரதேசச் செயலாளர் உற்பட ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம்.
இன்னும் அதிகமான வசதிகள் யாத்திரிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment