முல்லைத்தீவு நெய்தல் இயற்கை உரத் தயாரிப்பு தேசிய ரீதியில் மூன்றாம் இடம் -
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சிரமசக்தி மக்கள் கருத்திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் இளைஞர்களால் செயல்படுத்தப்பட்ட நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பெற்று 30 லட்சம் ரூபாய் பரிசை பெற்றுக் கொண்டிருக்கிறது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2018ம் ஆண்டு நடைபெற்ற இத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன.
இந்த திட்டங்களில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உதயம் இளைஞர் கழகத்தினர் மேற்கொண்ட நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்று 30 லட்சம் ரூபாய் பண பரிசை பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட இளைஞர் சிரம சக்தி மக்கள் கருத்திட்டம் திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள், பணப் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற குருநாகல் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
குருநாகல் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய குறித்த திட்டம் மூன்றாம் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டு 30 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.
குறித்த இந்த திட்டத்தில் பண பரிசிலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தின் அதிகாரிகள் குறிப்பாக திட்டத்தை நடைமுறைப்படுத்திய குறித்த பிரதேசத்தினுடைய இளைஞர் சேவை அதிகாரி T. ரதீசன், குறித்த இளைஞர் கழகத்தினுடைய இளைஞர்கள் சென்று இந்த பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.
முல்லைத்தீவு நெய்தல் இயற்கை உரத் தயாரிப்பு தேசிய ரீதியில் மூன்றாம் இடம் -
Reviewed by Author
on
July 20, 2019
Rating:

No comments:
Post a Comment