முல்லைத்தீவில் காணாமற்போனோரின் உறவினர்களை சந்தித்த சிங்கள மாணவர்கள் -
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல வருடங்களாக தமது பிள்ளைகளை காணாது தேடி அலையும் தாய்மார் தமது உள்ளக்கிடைக்கைகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் காணமற்போனோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,
காணமற்போன எங்கள் பிள்ளைகள் தொடர்பில் பலவருடங்களாக நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காத நிலை அறிந்து மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.
இத்தனை வருடங்கள் நாங்கள் எதிர் பார்த்துள்ள தீர்வை பெற்றுத்தர குறித்த மாணவர்கள் முயற்சிப்பார்கள் என நாங்கள் நம்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் காணாமற்போனோரின் உறவினர்களை சந்தித்த சிங்கள மாணவர்கள் -
Reviewed by Author
on
July 14, 2019
Rating:

No comments:
Post a Comment