முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம்... லண்டனில் என்ன நடக்கும்? ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரச்சார அதிர்ச்சி புகைப்படங்கள்
தீவிரவாதிகளை கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மெம்ரி ஜேடிடிஎம், தீவிரவாதிகளின் ஊடகங்களில் இது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது.
அதில் இருக்கும் புகைப்படம் ஒன்றில், நீங்கள் நாங்கள் தோற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம், இஸ்லாமியா ஆதரவாளர்கள் சரண்டர் அடைத்துவிட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் கூடிய விரைவில் லண்டன் மற்றும் பல இடங்களில் தாக்குதல் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த புகைப்படத்தில், அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் இருக்கும் மஞ்சள் நிற வாடகை வாகனத்திற்கு அருகே ஒரு தற்கொலை தாரி குண்டுடன் நிற்கிறான், அதில் எங்கள் இரத்தம் வெற்றியடையும், ஒரு சிறந்த அழிவை கொடுப்போம், இஸ்லாமியர் அல்லாதவர்களை அழிப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது புகைப்படத்தில், San Francisco-வில் இருக்கும் தெருவோன்றில், ஐ.எஸ்.தீவிரவாதியின் கொடியை கையில் பிடித்து நிற்கிறான். அதில், எல்லாவற்றிற்கும் பதில் கொடுங்கள், தொண்டையை கிழித்து அவர்கள் இறப்பதை பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவில் பதுங்கியிருந்த தீவிரவாத அமைப்பை இந்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க படைகளும், சிரியாவும் இணைந்து அவர்களை வெளியேற்றியது. இதனால் அங்கிருந்த தீவிரவாதிகள் வேறொரு இடத்தில் பதுங்கியிருப்பதாக கூறி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலினால் 250 பேர் பரிதாபமாக பலியாகினர். அதுமட்டுமின்றி இறந்ததாக கூறப்பட்ட ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadi கடந்த ஏப்ரல் மாதம் பேசிய வீடியோ வெளியாகி உலகநாடுகளை அதிரவைத்தது குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம்... லண்டனில் என்ன நடக்கும்? ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிரச்சார அதிர்ச்சி புகைப்படங்கள்
Reviewed by Author
on
July 31, 2019
Rating:
No comments:
Post a Comment