வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள் -
இப்படி வாயின் வழியே நுழையும் கிருமிகள், உடலின் இதர உறுப்புக்களை பாதித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
இதனை எளிய முறையில் போக்க இயற்கை முறைகள் பல உள்ளது.
அந்தவகையில் இதிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

- ஆயில் புல்லிங். தினமும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு 10 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவி, வழக்கம் போல் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
- தினமும் சற்று புளிக்க வைத்த தயிரை உட்கொண்டு வந்தால், அது வாயில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, கெட்ட பாக்டீரியாக்களின் அளவை எதிர்த்துப் போராடி, வாயில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும்.
- வேப்பிலை எண்ணெயை ஈறுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வாயைக் கழுவுங்கள்.
- உங்கள் வாய் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க நினைத்தால், க்ரீன் டீயை தினமும் குடியுங்கள். ஏனெனில் இது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பல்லைச் சுற்றி ஏற்படும் நோயின் அபாயம் குறையும்.
- வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், இந்த டீ-ட்ரீ ஆயில் எண்ணெயை அன்றாடம் தவறாமல் பயன்படுத்துங்கள். ஏனெனில் பல் ஈறு அழற்சி மற்றும் ஈறுகளில் உள்ள இரத்தக்கசிவைக் குறைக்கும்
வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள் -
Reviewed by Author
on
July 31, 2019
Rating:
No comments:
Post a Comment